Skip to main content

Posts

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

5. மனிதரை நாணிக்குறுக வைக்கும் மரங்கள்             என் ஒன்றரை வயதுப்பேரன் நடக்கப் பழகியதிலிருந்து என்னை வீட்டுக்கு வெளியே இழுக்கும் தந்திரம் தெரிந்திருந்தான். அந்தத் தந்திரம் எனக்குச் சுகமானது. முதலில் அவன் வாசலுக்கு வெளியே போய் நின்றுகொண்டு என்னை தாத்தா தாத்தா என்று உரக்கக்கூவி அழைப்பான். இரண்டு முறைக்கப்புறம் அவன் குரலில் காத்திரம் இருக்கும். அவன் அழைப்பில் வசீகரிக்கப்பட்டவனாய் மெல்ல வாசலுக்குச் செல்வேன். வீட்டில் அத்தனை பேர் இரூக்க என்னைத் தேர்வு செய்யும் காரணம் என்ன? குழந்தைகள் எந்தக் கல்லூரியில் கற்றுக்கொள்கின்றன உளவியலை? நான் அவனை அழைத்துச்செல்வதில் முன்னோடியாக இருந்திருக்கிறேன். பரந்த வெளி ஊட்டும் சுகந்தம் அவனையும் ஆட்கொண்டிருக்கிறது.        நான் வெளியே சென்றதும், என் செருப்பைக்கொண்டுவந்து, அதனைச் சேர்த்து வைத்து , அதை காட்டிப் போடச் சொல்வான். அத்தனை பேரின் செருப்பும் கலந்திருக்க , ஒரு முறைகூட தவறுதலாக எடுக்காமல் என்னுடையதைத் தேர்வு செய்யும் அறிவு அவனுக்குக் கிட்டியதன் மர்மம் புரியவில்லை. குழ...

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

4. உயிரினங்களுடனான  உன்னதத் தருணங்கள்.                   நான் லங்காவியில் இருந்த சமயம் என் மகன் நான்காம் ஆண்டில் என் பள்ளியிலேயே படித்து வந்தான். எல்லாச் சிறார்களுக்கும் இருக்கும் பிராணிகளின் மேலான ஈர்ப்பு இவனுக்கும் இருந்தது. ஒரு முறை ஒரு மணிப்புறாவைப்பிடித்து வந்து ஒரு கூட்டில் அடைத்துவைத்து பாதுகாக்க ஆரம்பித்தான். வானாளவிப்பறந்த பறவைகளை அடைத்துவைப்பது பாவச்செயல். அது அடிமைப் படுத்துவதற்கு ஈடானது என்று சொன்னேன். “இல்லாப்பா, கொஞ்ச நாள் வெளிய விட்ருவன், “ என்று எனக்குச் சமாதானம் சொல்லி வந்தான். கொஞ்ச நாள் கழித்து விடுவதற்குப் பதில் இப்போதே விட்ரலாம்ல’” என்றேன். அவனுக்கு அதில் திருப்தி இல்லை. அதனை மிக அருகில் இருந்து பார்க்கும் பரவசத்தில் அவன் இருந்தான். அகன்ற வெளியில் கைக்குக்கிடைக்காமல் பறந்து திறிந்ததை அருகில் வைத்துப் பார்க்கும் அவன் விருப்பத்துக்கு இணங்கினேன். கொஞ்ச நாள் அது வெளியில் பறந்து செல்லும் முயற்சியில் இறக்கை¨யைப் படபடத்துக்கொண்டிருந்தது. ஓரிரு வாரங்களுக்குப்பிறகு கொஞ்சம் அடங்கப் பழகிக்கொண்ட...

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

3. ஆயுதங்கள் தின்று விட்ட ஆல்பங்கள்         போர்கள் விவரிக்க முடியாத சோதனைகள் நிறைந்தது. சங்கப்பாடலொன்றில் போர் நியாய முறைகளை எடுத்துச்சொல்கிறது. போரில் சம்பந்தபடாதவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதைக் கறாரான கொள்கையாகவே முன்வைக்கிறது. பெண்டிர் , குழந்தைகள், வாழ்வு தரும் மாடுகள், கோயில்கள் இவற்றுக்குப் போரால் சேதம் நேர்ந்துவிடக்கூடாது என்ற கரிசனத்தை முன்வைக்கிறது. அன்று அவர்கள் அதனைக்கடைபிடித்தார்கள். போரானலும் மனிதாபிமானப் பண்புகளைக் காட்டினார்கள். இன்று என்ன நடக்கிறது. எம் 16 ரக தானியங்கி (ஆட்டோமேட்டிக்) துப்பாக்கிகள் சகட்டு மேனிக்கு பொதுமக்களை சுட்டுத் தள்ளுகிறது. பள்ளிகள் கோயில்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. ஏவுகனைகள் மக்கள் குடியிருப்புப்பகுதிகளை குறிவைத்து தாக்குகிறது. கையெறிகுண்டுகள் கைக்குழந்தைகளையும் விடுவதில்லை. கன்னிவெடிகள் கால்களைபறித்து வாழ்நாளை முடமாக்கிவிடுகிறது. போர் விமானத்திலிருந்து வீசப்படும் குண்டுகள் விவசாய நிலத்தை ஊணமாக்குகிறது. ஹிரோசிமா நாகசாக்கி மீது வீசப்பட்ட ரசாயண குண்டு செய்த வரலாறு பதிவு செய்துவைத்த பிழையை இன்று படிப்பவர்களிடமும்...

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்

2. விரட்டுகின்ற மிருகங்கள்          கோயில்களுக்குச் செல்லும் பல தருணங்களில் அங்குள்ள கழிவறைக்குச்செல்வதைத் . தவிர்த்திருக்கிறேன். இருப்பினும், என் துரதிஸ்டம் சமீபத்தில் கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டிய கட்டாயத்தில் நான் இருந்தேன். என் மகனின் திருமணம் அதிகாலையில் ஒரு விநாயகர் கோயிலில் நடப்பதென முடிவெடுக்கப்பட்டு அக்குறிப்பிட்ட கோயிலைப் பார்ரக்ச்சென்றேன். கோயிலில் முன்பணம் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டு வந்துவிட்டேன். மணநாளுக்கு மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும்போது கோயில் அலங்கரிப்புக்கான ஆயத்த வேலகளில் இறங்க ஆரம்பபித்தோம். பலர் கூடும் இடமாயிற்றே கழிவறைச் சுத்தத்தையும் கண்காணிக்கவேண்டும் என்பதற்காக அந்தப்பக்கம் போனேன். கழிவறையை நெருங்கிய தருணத்தில் இங்கே வராதே என்று மிருகத்தைப்போல என்னை விரட்டியது. அதன் துர்வாடை மொழியில் நான் பின் வாங்க ஆரம்பித்தேன். அப்போது என்னிடம் கோயில் பயன் படுத்துவதற்க்காக வாடகைப்பணம்  வாங்கிய அலுவலரும், ஒரு பெண்மணியும் இருந்தனர். கழிவறையைப்பற்றி முறையிட்டுவிட்டு திருமணத்தன்று அது தூய...

ஹோலிடேன்னா இப்படித்தாம்பா

          கடந்த வெள்ளிக்கிழமை 20.5.11ல் மீண்டும் மலேசியாவின் கிழக்குக்கடற்கரை மாநிலமான திரங்கானு மாநிலத்தின் பெர்ஹெந்தியான் உல்லாத்தீவுக்குப் பயணமானோம். பின்னிரவு இரண்டு மணிக்கு இரண்டு கார்களில்  கிளம்பிவிட்டோம். நாங்கள் மேற்குக் கடற்கரை மாநிலமான கடாரத்திலிருந்து குறுக்கு வெட்டாக போடப்பட்ட நெடுஞ்சாலையைக் கடந்து ஏழு மணி நேர ஓட்டத்தில் துறைமுகத்தை அடைந்தோம். பின்னிரவில் கிளம்பினால்தான் காலை ஒன்பது மணிக்குள் துறைமுகத்தை அடைய முடியும். அதை விட்டால் வேறு பயணப்படகு இல்லாமலில்லை. ஆனால் விடுதி செக் இன் நேரம் 12.00 லிருந்து அந்த நாளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவே இந்தப் பின்னரவுப் பயணம் போலும். என் மகன்கள் இரண்டு பேரின் ஏற்பாடு இது. எனக்கு இந்த நள்ளிரவுப்பயணத்தில் சம்மதம் இல்லைதான். இருவருக்கும் அப்பாவையும் அம்மாவையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணம்தான் காரணம். எல்லாம் அவர்கள் செலவு.            காலையில் ஏழுக்கேல்லாம் துறைமுகத்தில் இருந்தோம்.விடிய விடிய தூக்கமில்லை. அவர்கள்...

ஆக்டோப்பஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் (புதிய கவிதைத்தொடர்)

1. மறந்து விடுவதும் மன்னித்து விடுவதும் மனிதத்தன்மையா ? இலக்கிய வாசிப்புத் தளத்தில் மலேசிய வாசகர்கள் கவிதைத்துறையை விட்டு விலகிச்செல்வதாக எனக்குப்படுகிறது. இன்றைய நவீன கவிதைகள் இறுக்கமாகவும் இருண்மைப்போக்கையும் கடைபிடிப்பதால் வாசகர்களில் விலகலைத் தவிர்க்கமுடிவதில்லை.. பிடிக்காத உறவினரை, நண்பரைச் , சக மனிதரை நாம்ட எதேச்சையாகப் பார்த்தவுடன் பார்க்காதமாதிரியான பாவனையில், அவர் பார்வையே பிடிக்காமல் ஒதுங்கி நடந்து விடுவது போலவே கவிதை ஏட்டையும் விரல்களால் தள்ளிக் கடந்து போய்விடுகிறோம். படித்தாலும் புரியாது , வாசித்த மகிழ்வும் உண்டாகாது என்ற சுயகரிசனத்தில் நாம் அதனை நெருங்க மறுக்கிறோம். இது இலக்கியத்துக்கு உண்டாகிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு. ஆனால் பல நல்ல கவிதைகளுக்குள் நம்மை வசீகரிக்கும் அம்சங்கள் நிறைய இருக்கும். நம்மை சுத்திகரித்து புனிதப்படுத்தும் முயற்சிகள் தென்படும். நம் ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆழமான செய்திகள் கிடைக்கும். நம் வாழ்வனுபவ சித்திரங்களைக்கூட கவிதையினூடே காணலாம். நம்மைப்பற்றிச் சொல்வது போலவும், நாம் அறிந்த மனிதரின் ரகசியங்களை வெளிப்படுத்துவது போலவும் சில சமயம...

பனிப்பொழிவில் 10 நாட்கள்

1. பழைய கோட்டை 1000 ஆண்டு பழமை வாய்ந்தது 2. மிதக்கும் அரண்மனை 3. பழைய கோட்டை நுழை வாயில் 13. அறிவார்ந்த மன்னர்  அதனை அடுத்து ஜந்தர் மந்தர் என்ற இடத்துக்கு கொண்டு சென்றார் மனோஜ். ஜந்தர் மந்தர் என்பதன் பொருள் formula calculation என்பதாகும். கால அளவை, வானிலை கணிப்பை, கிரக அமைப்பை கண்க்கிடும் இடத்தையே ஜந்தர் மந்தர் என்று அழைக்கிறார்கள். 1727ல் ஜெய் சிங் என்ற மன்னரால் நிறுவப்பட்ட இடம் இது. நக ஓவியம் வரைந்த மன்னர் ஜெய் சிங்தான் இவர். அவர் வானவியல் துறையிலும் கணக்கியல் துறையிலும் , வான சாஸ்திரத்திலும் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார் . அவர் மேல் நாட்டில் கற்ற படிப்பை வைத்து கள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். நேர கணக்கை கடிகாரம் வரும் முன்னரே எப்படிக் கணக்கிடுவது என்பதற்கான முறையான அளவீட்டுக்கருவி அங்கே அமைக்கப்பட்டிருந்தது. சூரியன் உதித்து சாயும் நேரத்தில் நிழல் விழும் கருவியைக்கொண்டு நேரம் அறியலாம். நாங்கள் புரிந்துகொள்வதற்குச் சிரமமில்லாமல் இருந்தது. அப்போது கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் துல்லிதமாக இல்லையென்றாலும் நேரத்தை நிமிடக் கணக்கு குறையாமல் காட்டியது. சூரிய சந்தி...