நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் ,  வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து ,  சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் .  ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே ,  இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் ,  கணிதம் அறிவியல் ,  வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் ,  இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...
 
 
Comments
இலக்கிய உலகை ஆட்சி செய்தது உண்மைதான். ஆனால் எல்லா இலக்கிய வடிவத்துக்கும் நேர்ந்த வடிவமாற்றமும் உள்ளீட்டின் மாற்றமும் இதற்கும் உண்டானது இயற்கையின் நியதி. இன்றைக்கு வேறு வடிவத்தில் வேறு பாடுபொருளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இலக்கியம். அவ்வளவுதான். இதுவும் மாறும். எல்லாமே மாற்றத்துக்கு உட்படுவதுதான் நிதர்சனம்.