Skip to main content
இறுக்கமாக

பூட்டப்பட்ட

எல்லாகதவுகளின்\

எல்லாச்சாவியையும்

அவனே வைத்துக்கொள்கிறான்

துவாரத்தின் வழியே

சிறியா கீற்றிலிருந்தாவது

கவிதை கசிகிறதா

என்ற நப்பாசையில்

நம்பிக்கயான தருணத்தில்

பூட்டுகள் தெறிக்கின்றன

இன்பம் சுகித்தவாறு.

Comments

Anonymous said…
varalaadru pathivu intah aaivau kaddurai. nandu innum niraya segarithu varayappadumaanal innum seithigal segarikkappadum vaazthukkal KOPUNNIAVAAN AVARGALE nanri
ko.punniavan said…
உங்கள் கருத்துக்கு நன்றி. இக்கட்டுரைக்கான நேர ஒதுக்கீடு 20 நிமிடம் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதனால் நிறைய தகவல்கள் எழுத முடியவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாக எழுதலாம்.என் வலைப்பூவுக்கு தவராமல் வருகை தரும் உங்களுக்கு நன்றி.
Anonymous said…
kaathal,karppu,veeram,poor,naadu,inam,makkal ithil yentha suzalaaga irunthaalum navinakkavithaigal oru thaakkathai undu pannaathu yendu navinathai puraddiyappin purinthukonden,ezathu kavithaigalai uthaaranam kaadda vhendaam athu thiagathil iruthu velippadum puthuk kavithaigal.
ko.punniavan said…
புதுக்கவிதைகள் வந்த புதிதில் அதன் பாடுபொருள் சமூக அவலங்களின் வெளிப்பாடாக புனையப்பட்டது. சாதிமை,முதலாளித்துவம், சுரண்டல், மார்கிசியம், பெண்ணியம், பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க வன்கொடுமை, ஏழைமை போன்ற பாடுபொருள்கள் கையாளப்பட்டன.அது சாதாரண வாசகன் மனதையும் பாதித்தது. மக்களைப்போய்ச் சேர்ந்தது என்பதுதான் மிகப்பெரிய வெற்றி. புதுக்கவிதையின் பாய்ச்சல் வேறு எந்த இலக்கிய வடிவமும் கண்டிராத ஒன்று.குறுகிய காலத்தில் அதன் தாக்கம்
இலக்கிய உலகை ஆட்சி செய்தது உண்மைதான். ஆனால் எல்லா இலக்கிய வடிவத்துக்கும் நேர்ந்த வடிவமாற்றமும் உள்ளீட்டின் மாற்றமும் இதற்கும் உண்டானது இயற்கையின் நியதி. இன்றைக்கு வேறு வடிவத்தில் வேறு பாடுபொருளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இலக்கியம். அவ்வளவுதான். இதுவும் மாறும். எல்லாமே மாற்றத்துக்கு உட்படுவதுதான் நிதர்சனம்.