2. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

 
 
20 டிசம்பர் வீட்டிலிருந்து கிளம்பி மூன்று கார்களில் கோலாலம்பூருக்குப்
புறப்பட்டோம். 2 கார்களில் புறப்படலாம் என்ற எண்ணத்துக்கு  தடிமனான குளிராடைகள் குறுக்கே நின்றன. முதல் நாள் இரவில் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள காலை விமான ஏறுவதாகத் திட்டம். மூன்று கார்களையும் ஏழு நாட்களுக்கு விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதற்கான கட்டணம் மிச்சம். உறவினர்களே விமான நிலையத்தில் விட்டுச்சென்று 27ம் நாள் வந்து ஏற்றிக்கொண்டனர். பாவம் சிரமம்தான்.வேலையிலிருந்து விடுப்பெடுத்து  முகம் கோணாமல் உதவியாக இருந்தனர்.
                விமானத்தில் ஏறி அமர்வதற்கு முன்னர் பூர்வாங்க வேலைகளையெல்லாம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எங்கள் பயணப் பைகளின் சுமை 5 கிலோ கூடிவிட்டிருந்தது. அதற்கு ஒரு கிலோவுக்கு 50 ரிங்கிட் விதித்தார்கள். நான் சொன்னேன் கைப்பைகள் ஒவ்வொன்றும் 7 கிலோக்கள் இருக்காது. கூடுதல் சுமையை கைப்பைகளில் போட்டுக்கொள்ளலாமென்று.
என் இரு மகன்களும்  "ச்சும்மா போங்கப்பா நாங்க பாத்துக்கிறோம், வந்துட்டாரு கஞ்சத்தனத்த காட்ட" என்று விரட்டினர்.

"தண்டத்துக்கு 250 ரிங்கிட் கட்டாதீங்கடா!" என்றேன்.

என்னைப் பார்த்து முறைத்தார்கள். அவர்களுக்கு எங்கேயும் பேரம் பேசிவிடக்கூடாது. அது அவர்கள் கௌரவத்துக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமென்ற பயம்.

 நான் சொன்னேன்.... "புள்ளைய்ங்களா டோனி பெர்நாண்டஸ் நாட்டுல பத்து பணக்காரன்ல ஒருத்தர், அவர முதல் நிலை பணக்கரனாக்கப் பாக்குறீங்களே என்றேன்,"

"ஆவட்டுமேப்பா! நம்ம ஆள்ள ஒருத்தர் ப நம்பர் ஓன் பணக்காரரா வர்ரதுல ஒங்களுக்கு ஏன் வயித்தெரிச்ச?

"இப்படியே போனா எம்புள்ளைங்க நீங்க ஆகக் கடைசி பத்து
ஏழைகள் பட்டியல்ல வந்துடுவீங்களேப்பா! என்றேன்.

"ஆமாம்பா 250 ரிங்கிட்ல நாங்க ஏழையாயிடுவோம் ல?"

"இப்படியே வீண் செலவு பண்ணா? ஒங்க கௌரவ குறைச்ச ஒருத்தன மேலும் பணக்காரனாக்குதுன்னா... அது எவ்ளோ பெரிய தியாகம்டா சாமி.." என்று சொல்லிக்கொண்டே வெளியாகிவிட்டேன். இல்லை, இல்லை, வெளியாக்கப் பட்டேன்.

கடைசியில் பிடிவாதமாய் டோனியை மேலும் 250 ரிங்கிட் பண்க்காரனாக்கி விட்டார்கள் என் தங்கங்கள். அடுத்த ஆண்டு கோடீஸ்வர்னகள் பட்டியலப் பாக்கணும்!
கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காச இப்படி சாம்பலாக்கறானுங்களே.

என் வயிற்றெரிச்சலை என் மனைவியிடம் வந்து கொட்டினேன்." நீங்க என்னா பண்ணிக்கிட்டு இருந்தீங்க... பராக் பாத்தீங்களா..? என்றாள்.

"கடைசில இவனுங்க செய்யுறத் பராக் பாக்குற அளவுக்கு ஆக்கிட்டனுக்களே! .. "என்று முனகினேன்.

டோனி பெர்னாண்டஸ நக்கலடிச்சு யாரோ என் மின்னஞ்சலுக்கு அனுப்பிய ஒரு கதையைய விமானம் பறக்கும் போது என் பேரப்பிளைகளிடம் சொன்னேன். இப்போ அதுங்கத்தான் நம்ம பேச்ச கேக்குதுங்க! வெளங்கலன்னாளும் பராவால்ல!

டோனி கடைத்தெருவுக்குப் போறாரு. அங்க ஒரு கடையில ஒரு மக் பியர் ஒரு ரிங்கிட்னு போட்டிருக்கு. மனுஷன் ஆர்வமா கடைக்குள்ள நுழைறாரு.
                    
ஒரு மக்பியர் உண்மையிலியே ஒரு ரிங்கிட்டான்னு கேட்டாரு...

",யெஸ் சர்." என்றார் ஒரு அழகான பனணிப்பெண்.

ஒரு மக் பியர் வாங்கிட்டு  மேசைக்கு வந்து நாற்காலிய இழுத்து உட்காருகிறார்.

பணிப்பெண் வந்து," சர் உட்காரு இடத்துக்கு 2 ரிங்கிட் சார்ஜ்" என்றாராம்.

"ஓ அப்படியா," என்று 2 ரிங்கிட் கொடுத்தாராம்.

பிறகு தன்னுடைய மடிக்கணினியைத் திறந்து தன் பணிகளில் மூழக, மீண்டும் பணிப்பெண் சொன்னாராம், "சர் இங்க லேப் டோப் பாவிக்க 2 ரிங்கிட் கட்ட
ணம் சார்," என்றாளாம். மனுஷன் முனகிக்கொண்டே 2 ரிங்கிட் கொடுக்கிறார்.
பிறகு வைபை மூலம் இணையத்தைத் தொடக்குகிறார். மீண்டும் பணிப்பெண் வந்தாராம்.

"என்ன வைபைக்கு  2 ரிங்கிட்டா?" என்றாராம்.

"யெஸ் சர், " என்று கூறிக்கொண்டே 2 ரிங்கிட்டை வாங்கி விடுகிறார்.

இப்படித்தான் ஏர் ஏசிய  ஏறுவதற்கு முன்னாலும் பின்னாலும் பயணியை ஏர் உழுது  புரட்டி எடுத்து தோண்டி எடுத்துவிடுகிறது!

டோனி பெர்னாண்டஸ் ஐயா நீங்க மலேசியாவில் முதல் நிலை பணக்காரனாக என் முதற்கண் வாழ்த்துகள்! நம்ம ஆளுல்ல!

 ஐந்தேமுக்கால் மணி நேரத்தில் பெய்ஜிங் விமான நிலையத்தை அடைந்தோம். விமான சன்னல் கண்ணாடியைத் தொட்டுப் பார்த்தேன். சில்லிட்டிருந்தது.

விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் கிளியரண்ஸ் கஷ்டத்தில்தான் முடிந்தது. மலாய்க்காரர்கள் நிறைய பேர் சீனப் பயணத்தை மேற்கொண்டிருந்தடனர். எனக்குத் தெரிந்து சிலாங்க்கூர், பினாங்கு, ஜோகூர், கோலாலம்பூர் என் பல இடங்களிலிருந்து கூட்டங் கூட்டமாய் விமான நிலையத்தில் பார்த்தேன். அவ்விமானத்தில் முக்கால் வாசி இடத்தை அவர்களே பிடித்திருந்தனர். கொடுத்து வைத்தவர்கள்- அரசால்!
கஸ்டம்சில் ஒரு மலாய்கார வாலிபனை வெகு நேரம் துழாவித் துழாவி எதையோ கேட்டுக் கொண்டிருந்தனர்-புகைப்படத்தைப் பார்த்தவாறு!
என் பாஸ்போர்ட்டில் உள்ள புகைப்படத்தைப் பார்த்தேன். அதில் என் தலை முடியும் மீசையும் இள'மை'யாக இருந்தது. வரும் அவசரத்தில் வெள்ளையைக் கருப்பாக்க மறந்திருந்தேன். அது செம்பட்டையாகவும், சில பல வெண்மையாகவும் நிறம் மாறிவிட்டிருந்தது. இந்த 'மசிரே' என்ன பிடிச்சு கொடுத்திரும்மோன்னு பயம் வந்துவிட்டது.....புது இடம்... நம்ம ஆளுங்க சீன சிறையில் கடத்தல் குற்றங்களுக்காக 'மோய்" (தமிழ் நாடுன்னா கலி) குடிக்கிறாங்கன்னு நம்வெளியுறவு துணை அமைச்சர் ......... பிள்ளை ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவுக்கு வந்து விட்டது.
" மாட்னா மவனே                         அவ்வளதாண்டா   .....ன்னு!"  நிறைய தமிழ் பட வீராவேச வசனக்கள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருமா....

                                      என் மனைவி, மருமகன், பேரப்பிள்ளைகள்
 
                                   என் கடைசி பேரப்பிளை விதுரனோடு என் மனைவி
                                                  என் மூன்று வாரிசுகள்
 
                                                 நவீனா என் முதல் பேத்தி

தொடரும்...... 

Comments

சுவாரஸ்யமாக இருக்கு சார்..
ko.punniavan said…
நன்றி விஜி.