Skip to main content

சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

    டிசம்பர் 21 - 27 வரையிலான சீனப் பயணம்
                                                          சீனப்பெருஞ்சுவரில்





                                           என் மகளும் மருமகனும்
என் பேரப்பிள்ளைகளில் மூவர்


“கடுமையான  குளிர் காலத்தில சீனாவுக்குப் போலாங்கிறியேஸ குளிர இந்த ஒடம்பு தாங்குமாஸ?” என்று சீனப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்த என் மூத்த மகனைக் கேட்டேன்.

“என்னாப்பா என்னமோ எவர்ஸ்ட் மலை உச்சிக்கு கொண்டு போற மாரி பேசுறீங்க! ச்சும்மா வர்ரீங்களா” என்றே கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாய் விட்டேத்தியாய் பேசுவான்.

“எங்களுக்கெல்லாம் வயசான ஒடம்புடா, சீக்கு செவாப்பெல்லாத்துயும் வா வா வந்து ஒட்டிக்கன்னு  வலிய போய் வரவேற்கிற ஒடம்பு ,” என்றேன்.

“எம்பது வயசுல இமய மலையெல்லாம் ஏர்றாங்க, அவங்கல்லாம் நல்லாத்தான் இருக்காங்கஸ. ஒங்களத்தான் அதிசயமா வந்து தாக்குதான்” என்று வாயை அடைத்தான். என் மேல் அவனுக்கென்னவோ பழைய கோபம் இருக்கலாம்!

 அவன் எங்கேயாவது சுற்றுப்பயண ஏற்பாடு செய்தால் எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாகவே இருக்க வேண்டுமென்றே பொத்திப் பொத்தி வைத்து கடைசி நேரத்தில் குண்டைப் போடுவான். அது எங்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக கொடுக்க வேண்டுமென்று என்ணுவான் போலும்! அதனால் பாஸ்போர்ட்டை ரகசியமாக எடுத்துச் சென்று டிக்கட்டுக்கு பதிவு செய்துவிட்டு, விசாவுக்குப் நிழற்படத்தையும் கொண்டு சென்று எல்லாவற்றையும் முடித்த பின்னரே ரகசியம் அவனிடமிருந்து கசியும்.

என் வயதையொத்த நண்பர்கள்,” சீனாவுக்கு இந்த நேரத்துல யாரும் போக மாட்டாஙக..அங்க மைனஸ் 5, 6, 7 ன்னு குளிர் பதிவாகுது. இந்த நேரத்துல போறேங்கிறீங்கஸ?” என்று அச்சுறுத்தினர். நண்பர்கள் இதை விடப் பெரிய கைங்காரியம் வேறென்ன செய்து விட முடியும்!

அது போதாதென்று ரஷிய குளிரில் எழுபத்தெட்டு பேர் இறந்துவிட்டார்கள் என்ற பத்திரிகை இணையச் செய்திவேறு. எனக்கு சீனக் குளிர் தாக்குமுன்னரே  நடுங்கியது. சரி விதி அங்கதான் கைவிரிச்சி காத்திருக்குன்னா என்ன பண்றது? டிக்கட் புக் பண்ணியாச்சுஸ(ஆமாம் டிக்கட் புக் பண்ணியாச்சு’) விசா எடுத்தாச்சுஸகுளிர் உடை வாங்கியாச்சு. வேற வழி.... பொறப்படு...

வெளியூர் பயணமென்றால் என் வீட்டுக்காரி.. பேரப்பிள்ளைவிட ஒரு அடி உயரேதான் குதிப்பாள். நான் படும் சிரமத்தைக்கண்டு உள்ளூற ரசித்து சிரித்தபடி! அவளுக்கு ஒரு கொசுறு மகிழ்ச்சி!

எங்கள் குடும்பத்தின் எண்ணிக்கை 14 பேர். எண்ணிக்கையை நான் இப்போது துல்லிதமாகச் சொல்வதற்குக்  சீனாவில் யாரும் காணாமல் போய்விடக் கூடாதென்பதற்காக முன்கூட்டியே எண்ணி கணக்கு வைத்துக் கொண்டதுதான்  காரணம். எண்ணியபின் நானே மலைப் படைந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எண்ணி எழுதி வைத்துக்கொள்வதற்கு நானென்ன மக்கள் தொகை கணக்காபிசா வைத்திருக்கிறேன்? பேரப்பிள்ளைகளே 6 பேர். அதில் ஒரு வயதை எட்டிய விதுரன், என் கடைசி மகனின் மகனும் பயண நிரலிலடங்குவான். இவன் குளிரில் தாக்குப்பிடிப்பானா என்ற சந்தேகம் கூடுதலாக வேறு அச்சுறுத்திக்கொண்டிருந்தது. அப்புறம் நான் என் மனைவி,என் இரு மகன்கள், ஒரு மகள், மருமகன், மருமகள்கள்  என் ஆக மொத்தம் 14 பேர். சீனாவில் அடிக்கடி மேய்ச்சலுக்குப் போன ஆட்டுக்குட்டிகளை எண்ணியவாறிருப்பதே என் வேலையாகிப் போனது. ‘இத விட வேற வேல என்ன ஒங்களுக்கு’ என்று இதுதான்  முக்கிய பொறுப்புன்னு ஆகிப் போன வயது. என்ன பண்றது? சீனப் பயணத்துக்கு எனக்கும் சேர்த்து ஒரு டிக்கட் போட்டதற்கு இதுதான் பிரதானமான நோக்கமோ என்று சில சமயம் எண்ண வேண்டியுள்ளது. சரி விடுங்க அந்த சாக்குல சீனாவப் பாத்த மாறியும் இருக்கும்ல.

பயணத்துக்கு முன்னால அவசியமா வாங்க வேண்டிய குளிர் ஆடைகளின் விலை டிக்கட்டின் விலையைத் தாண்டி எகிறியது. லாங் ஜான் என்று சொல்லக் கூடிய இறுக்கமான உள்ளாடைகள், காதுவரை மூடும் தொப்பி, தடித்த குளிர் சட்டை, பருமனான காலுறை, கணுக்காலுக்கு மேல் ஏறி நிற்கும் காலணி, இங்கே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. சீனாவில் விலை மலிவு. “அங்கேயே வாகிக் கொள்ளலாமே,” என்று சொன்னதைக் கேட்ட என் மகன், “..அதுவரைக்கும் குளிரில நிக்க முடியுமா ஒங்களால?” என்றான்.

 “அம்மாடியோ அம்புட்டு குளிரா?”

 நான் ஏற்கனவே டில்லி , சிம்லா, பொன்ற இடங்களுக்கு குளிர் காலத்தில் சென்று வந்திருக்கிறேன். அந்த குளிரின் இம்சையையே தாங்க முடியவில்லை. இத்தனைக்கும் அங்கே 2 முதல் 5 செல்சியஸ் வரை குளிரடித்தது. சீனாவில் மைனஸ் 7 (-7 டிக்ரிஸ் செல்சியஸ்) என்றால் எப்படிச் சமாளிப்பது?


தொடர்ந்து வாங்க சீனா செல்வோம்.......... 

Comments

அருமையான சீன பயண அனுபங்கள்.. பாராட்டுக்கள்..

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

நல்ல நகைச்சுவையான பகிர்வு சார். வாய்விட்டு சிரித்தே விட்டேன்
Anonymous said…
முன்பு நான் என் சக நண்பர்களோடு சீனா சென்றிருந்த போது...
அப்பொழுதும் குளிர்காலம் தான். அங்குள்ள பருவ காலத்திற்கேற்ப
தடிப்பான குளிராடை அணிந்தும் குளிரின் வேகம் உள்லெலும்புக்குள்
விரல்விட்டு ஆட்டியது. அந்த நேரத்தில் அவருக்கு ஒன்னுக்கு வந்துவிட்டது.
கால் சட்டையின் ஜிப் பை திறக்க முடியாமல் அவர் பட்ட பாடு நான் நேரில் பார்த்தது,
அவர் குளிரில் நடுங்கியதை மட்டுமல்ல... "அது " எங்கிருக்கிறது என தடவித் துலாவியதையும் தான்.
உங்கள் பயணக்கட்டுரை படிக்கே சுவாரசியமாய் இருக்கிறது...தொடர்ந்து படிக்க ஆவல் சார்...
காத்திருப்பேன்.
-செபஸ்தியன்
ko.punniavan said…
நன்றி இராஜராஜேஸ்வரி. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.
ko.punniavan said…
நன்றி செபெஸ்டியன்,
சீனாவில் வசிக்கும் லட்சோப லட்ச சீனர்களுக்கும் அதே கதிதான். இன்னும் வட தெ துருவத்தில் அது காணாமலே போயிருக்கும் போல!
ko.punniavan said…
நன்றி விஜயலெட்சுமி,
தொடர்ந்து வருகை தாருங்கள் விஜி. நிறைய வியப்புகளும் நகைச்சுவையும் காத்திருக்கிறது.
ko.punniavan said…
நன்றி இராஜராஜேஸ்வரி

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...