Skip to main content

13. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்
மீண்டும் மலேசியா திரும்பு நாள் அன்று (26.12.2012.)
எங்கள் பயண நேரம் காலை மணி 11.00 என்றுதான் ஏர் ஏசியா தொடக்கத்தில் கொடுத்திருந்தது. ஆனால் பயணம் செய்ய இரண்டு வாரத்துக்கு முன்னர் அதனை பின்னிரவு மணி 1.00 தள்ளி வைத்துவிட்டது. ஏர் ஏசியா அடிக்கடி செய்யும் கோளாறு இது. இதற்கு கேள்வி முறையெல்லாம் கிடையாது. பயணச்சீட்டு சட்டதிட்டத்தில் அப்படித்தான் உள்ளது!

விடுதி அறைகள் முன்னமேயே பதிவு செய்து விட்டாதால்.. மேலும் ஒரு நாளைக்கு நீட்டித்தாக வேண்டும். ஒவ்வொரு அறையும் மலேசிய ரிங்கிட் 850.00. ஏர் ஏசிய செய்த தள்ளிவைப்பு எங்கள் பணத்துக்கு வைத்த கொல்லி வைப்பு!

என்ன செய்யலாம் என்று யோசித்த பிறகு அன்றைக்கு மேலும் ஒரு இடத்தைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் வெகு தூரம் உள்ள இடத்தையே பரிந்துரை செய்தார் மைக்கல். அதற்கான கட்டணமும் அதிகம்.குளிர்ப்பபனி மெலும் கனத்திருந்தது. சாலையோ வழுக்கும். தாமதமானால் விமானத்தைப் பிடிக்கமுடியாது. என்ன செய்யலாம்?

என்னையும் என் மனைவி மகள், ஒரு மருமகளை விடுதியில் ஓர் அறையில் விட்டு விட்டு மற்ற அனைவரும் பனிச்சருக்கு விளையாட்டுக்கு போவதாய் இறுதி முடிவெடுத்தனர். எல்லாப் பைகளும் ஓர் அறைக்குள் சேர்க்கப் பட்டது. திட்டமிட்டபடி பனிச்சறுக்குக்குக் கிளம்பிவிட்டது ஒரு பகுதி. எனக்கு அன்றைக்கான் பகலுணவு ஏற்பாடு செய்யவேண்டுமென்ற பணி.

பனிச்சறுக்கு விளையாட்டுத் தளத்துக்குப் போவற்கு  அவர்கள் விதித்த கட்டணம் 1500 மல்லேசிய ரிங்கிட். நாங்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியதால் இந்த மொய்- ! உள்ளபடியே அவ்வளவு செலவாகாது. அவ்வளவும திட்டமிடாத செலவு.

முன்னர் ஒருமுறை ' மார்க்கெட்டுக்கு' செல்லவேண்டுமென்று கேட்டதற்கும் வேன் ஓட்டுனர் 1000 ரிங்கிட் கேட்டார். இத்தனைக்கும் அது பெய்ஜிங் மாநகரத்திதான் இருந்தது. அதற்கு ஏன் இந்த அளவுக்குப் பணம்? கொஞ்சம் அறிவுப்பூரவ்மாகச் சிந்தித்தாலே போது.. இது வேன் ஓட்டுனர் நமக்கு வைக்கும் மொய் என்று.(மார்க்கெட்டில் எல்லா பொருட்களும் கிடைக்கும். குறிப்பாகத் துணிமணி வகையறாக்கள். சுற்றுப்பயண நிரலில் மர்க்கெட் போவது பற்றிய விபரங்கள் இல்லை ஏனெனில் அது சுற்றுப்பயணிகள் எல்லோரும் விரும்பிப் போகக்கூடிய இடம்.அங்கே போவதற்குக் கட்டணம் விதிக்கவேண்டுமென்பதே அவர்களின் உள்நோக்கம், )
பயணக்கட்டணத்தைக் கேட்டவுடன் எனக்குத்தலை சுற்றியது, நாம் டேக்சியில் போகலாம் என்றேன். உடனே மைக்கல் ஓட்டுனரிடம் பேசி 600 ரிங்கிட் கொடுத்தால் போதுமென்று பேரம் பேச ஆரம்ப்பித்துவிட்டான். என்ன தில்லு முல்லு பாருங்கள். டேக்சியில் போனால் அவன் எங்கே கொண்டுபோகிறான் என்றெல்லாம் நமக்குக் தெரியாது , பேசாமல் 600 ரிங்கிட் கொடுத்துப் போய்விடலாம் என்றான் மகன். இத்தனைக்கும் நாங்கள் வாங்கிய துணிமணி 500ஐக் கூட எட்டவில்லை. நான் விடுதி திரும்பிய பிறகு ஒரு விடுதிப் பணிப்பெண்ணிடம் கேட்டேன் மார்க்கெட்டுக்கு டெக்சியில் போக எவ்வளவு வருமென்று. அவள் வெறும் 30 யுவான் வருமென்றாள் . நம் பணம் 15 ரிங்கிட்.ஓட்டுனர் அப்படி கழுத்தறுத்தான். இல்லை இல்லை அறுக்கச் சொல்லி கழுத்தை நீட்டினார்கள்!

மார்க்கெட்டில் ஆங்கிலம் பிரஞ்ச் ஜப்பான் போன்ற மொழிகள் பேசும் அங்காடி வனிகர்கள் இருக்கிறார்கள். ஓரிடத்தில் மலாய்க்காரர்களோடு மலாயில் பேசிய சீன வியாபாரியையும் பார்த்தேன் சரளமாக.  ஆங்கிலத்தை எல்லா வணிகர்களும் பேசுகிறார்கள் மார்க்கெட்டில்.

காலை உணவுக்குப் பிறகு நாங்கள் ஒரு அறைக்குள் சங்கமானோம்.
பனிச்சறுக்கு விளையாட்டுக்குப் போனவர்கள் இரவு மணி 9,00த்தான் வந்து சேர்ந்தார்கள்.

இரவு உணவெடுத்துவிட்டு  10.30 மணிவாக்கில் விமான நிலையம் புறப்பட்டோம்.
இடையில் என் மகன் பனிச்சறுக்கு விளையாடிவிட்டு வந்தபோது 600 ரிங்கிட் கேமராவை மறந்து வந்து விட்டது தெரிந்தது. மைக்கலுக்குத் தெரிந்த ஒரு டேக்சிக் காரனிடம் கேமராவைக் கொண்டுவரச்சொல்லி பெற்றுக்கொண்ட்டோம். கேமரா கிடைத்திருக்கவில்லையென்றால் இங்கே படங்களைப் பதிவு செய்திருக்க முடியாது.

1.00 மணிவாக்கில் விமானத்தில் அமர்ந்ததும். விமானம் ஒரு மணிநேரம் நகரவில்லை. 2,20க்குத்தான் கிளம்பியது. வானிலக் கோளாறு என்றார்கள்.

காலை மணி 9.00க்கு விமானம் மலேசிய எல்லையைப் பிடித்ததும் எனக்கும் உடல் ஆரோக்கியக் குறைவு உண்டானது. அது நான்கு நாட்கள் நீடித்தது.
சிதோஷன நிலை  மாற்றம்தான் காரணம்!


அப்பாடா ... முடிஞ்சி!

(இந்தப் பதிவுகளுக்கு ஒவ்வொரு முறையும் தவறாமல் கருத்துரைத்து ஊக்குவித்த என் அன்புச் சகோதரி விஜி விஜயலெட்சுமிக்கு என் மனமார்ந்த நன்றி.)
Comments

நன்றி சார்... இன்னும் நிறைய இடங்களுக்கு நீங்கள் செல்லவேண்டும், அங்குள்ள வரலாற்றுச் செய்திகள் பல எங்களோடு பகிரவேண்டும்.
வணக்கம். நன்றி.
Anonymous said…
ரொம்பே நன்றி சார்...இப்பெதான் படிச்சி முடிச்சேன் உங்கள் பயணக் கட்டுரையை. உங்களோடு எங்களையும் பயணிக்கவைதமைக்கு நன்றி.
ko.punniavan said…
சீனப் பயணக் கட்டுரையை வாசித்தமைக்கு நன்றி.

Popular posts from this blog

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும்காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம்.

ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர்
ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான் வந்திருப்பதைக…

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …