2. காத்திருப்பு
மாலை ஆறரை மணிக்குத்தான் எங்களின் விமானப் பயணம் தொடங்கும். நானும் மனைவியும் (என் மனைவியும்) காலை 11.30க்கெல்லாம் கே.எல்.ஐ.ஏ விமானத்தளத்தில் வந்து இறங்விட்டோம். விமானம் ஏறும் வரை என்ன செய்வதென்று தெரியவில்லை.
என் இளைய மகன் முதல்நாளே கே,எல்லில் ஒரு திருமண நிகழ்வுக்கு
வந்துவிட்டிருந்தான். வந்த உடனே கூப்பிடுங்கள் , கே எல் பிரிக்பில்ஸில் பகலுணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் விமானத் தளத்தில் விட்டுவிடுகிறேன் என்றான். அந்தத் திட்டம் சரியாக வராது. அவன் இருக்கும் இடத்திலிருந்து விமான நிலையத்துக்கு ஒன்றரை நேரப் பயணம். பயணத்துக்கே நேரம் ஓடிவிடும். அதனால் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். அங்கேயே பகலுணவு உண்டோம். இரண்டாம் தளத்தில் கொஞ்சம் மலிவாகத்தான் உணவு கிடைக்கிறது. ஆனால் பசிக்குச் சாப்பிடலாம். எனவே பசித்தவுடன் சாப்பிடுவதுதான் உணவைச் சுவையாக்கும் சமரச உத்தி.
அன்றைக்கு விமானத் தளத்தைக் கவனத்துடன் பார்வையிட்டேன். நான் ஓரிரு முறை வந்தபோது அதன் கட்டமைப்பு குழப்பமானதாகவே பட்டது. கொஞ்சம் நிதானித்துச் சுற்றிப் பார்த்தபோது குழப்பமெல்லாம் நாமே தகவமைத்துக்கொண்டது என்றே பட்டது. பதற்றமில்லாமல் அவதானித்தால் தெளிவான பார்வை கிட்டுகிறது.
மணி நான்குக்கெல்லாம் எங்களோடு பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவராக
வந்து சேர்ந்தார்கள்.
காலையில் குளித்துவிட்டு வந்தாலும். உடல் வியர்வையில் கச கசத்தது. விமானத்தில் நன்றாக உறங்குவதற்கு நான் கழிவறையிலேயே
குளித்துவிட்டு உடை மாற்றிக்கொண்டு வந்தேன். கழிவறையில் குளிப்பதில் சற்று அடக்கம் இருக்கவேண்டும்.தலையில் ஊற்றும் நீர் அடுத்தடுத்த கழிவரைக்கு நகரும் சாத்தியம் அதிகம். சமதரை. கழிவறைக்கு வெளியேயும் தண்ணீர் தலை காட்டும், மற்றவர்
காலணியை நனைக்கலாம். கொக்கியில் தொங்கப்போட்ட ஆடைகள் தண்ணீர் சிதறி நனைந்தும் போகலாம்.
எப்படியோ குளித்துவிட்டு வெளியே வந்தேன் . யாரும் என்னை விநோதமாகப் பார்க்கிறார்களா என்ற சந்தேகம். நான் அவர்களை ஏறிட்டுப் பார்த்தால்தானே ! தண்ணீர் நழுவுவதுபோல நானும் மெல்ல வெளியேறிவிட்டேன்.
செக் இன் கௌண்டரில் எல்லாரும் வரிசையில் நின்றிருந்தார்கள். என் மனைவியைக் காணோம். நான் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.
அவள் அதிகாரம், மிரட்டல், உருட்டலெல்லாம் வீட்டில்தான். வெளியே வந்தால் அதெல்லாம் எங்கே போய்விடுமென்ற மர்மம் புரியவில்லை. இனிமே என் ஆட்டம் தொடங்கி விடும். நான் வெளியில் புலியல்லவா!
அவளை அழைத்துக்கொண்டு செக் இன் கௌண்டரில் பயணப் பைகளைப் போட்டுவிட்டு விமானத்தை நோக்கி நடந்தோம்.
ஏர் ஆசியா விமான நிறுவனத்தின் கருமித்தனம், சுரண்டல் எல்லாம் மாஸ் விமான நிறுவனத்தில் கிடையாது. ஏர் ஆசியா விமானத்தின் இருக்கையில் அமர்ந்த பின்னர் கீழே விழுந்த எதையும் எடுப்பதுஇமசையாகிவிடும். பக்கத்தில் உட்கார்ந்திருப்பவரை உரசாமல் இடிக்காமல் பயணம் செய்வது முடியாத காரியம். அதிலும் உடல் கனத்த ஒருவர் அருகில் மாட்டிக் கொண்டால் அவரோடு நாமும் சேர்ந்து சிரமப் படவேண்டி வரும். குண்டானவர் கூண்டில் மாட்டிக் கொண்ட குருவியாகி விடுவார் இலக்கைப் போய்ச் சேரும் வரை பிரசவ வேதனைப் படுவார். அங்காடி வியாபாரமெல்லாம் விமானத்தின் உள்ளேயே நடக்கும். அப்புறம் ஏன் டோனி பெர்னாண்டஸ் மலேசியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக வரமுடியாது?

தொடரும்........
Comments
வீட்டில் நீங்கள் பூனை. வெளியே புலியா? சிரிப்புதான் போங்க உங்களின் லொள்ளு..