கடந்த வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் லங்காவித்தீவுக்குச் சுற்றுலா போயிருந்தோம். மலேசியாவின் மேற்குக்கடற்கரை பகுதியில் ஒரு மீனவத்தீவாகவே 70களின் இறுதிவரை தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தீவு லங்காவி.( இலங்கையை நினைவுக்கு வருகிறதா? இராமனின் பாதச்சுவடு லங்காவியில் இருபதாகச்சொல்கிறார்கள்) விவசாய நிலமும் ஏழை மனிதர்களும் அவர்களைச்சூழ்ந்துள்ள ஏழ்மையைப்போல், கடல் அலைகள் மட்டுமே இருந்த இந்தத்தீவு இன்றைக்கு உரு மாறி, நிறம் மாறி, ஏழ்மை என்ற முள்வேலியை அகற்றிக்கொண்டு தன்னை வைரங்களாலான ஆபரங்ணங்களால் அழகுபடுத்திக்கொண்டு கம்பீரமாகக்காட்சி தருகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோல் சொடுக்கில் திடீரென வேறொன்றாய்க்காட்சி தரும் லங்காவித்தீவு கரையை வந்தடையும் அலகலைப்போல சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுத்த வண்ணம் இருக்கிறது. அந்தத்தீவீன் தலையெழுத்தை மாற்றிய மந்திரவாதி வேறு யாருமல்ல. மலேசியாவின் நான்காவது பிரதமராக 20 ஆண்டுக்கும் மேலாக இருந்த துன் மகாதிர் தான். ( துன் என்பது பேரரசர் வழங்கிய மிகப்பெரிய கௌரவ விருது) மகாதிர் மேல் மிகக்காத்திரமான அரசியல் சார்ந்த விமர்சனங்கள் இன்றளவும் வீசப்பட்டுக்கொண்டு இருந்...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)