தில்த்திஸ் மலையின் உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம்.
சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது. ஏஞ்ஜல் பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.
சுற்றுலா பயணிகளில் காபில் காரில் ஏறி இறங்க உதவ ஒரு பணிப்பெண்ணை சந்தித்துப்பேசினேன். அங்கே அவள் கோடைகால விடுமுறையில் வேலை செய்ய ஜெர்மனியிலிருந்து வந்தவள். ஜெர்மனியில் அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் ஒருநாள் வருமானம் 300 மலேசிய ரிங்கிட். தனுடைய ஒராண்டுக்கான கல்விச்செலவை ஒரு கோடை விடுமுறையில் சம்பாதித்து விடுவாளாம்.
கேபில் காரின் உள்ளே பணிப்பெண் |
இறங்கிய உடனே பனிமலைக்குப் போனோம். பனி பூப்போல கொட்டிக்கொண்டு இருந்தது. போகும் பாதையில்தான் சாருக்கானையும் கஜோலையும் பார்த்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அட சாருக் கான். நாங்கள் அவரிடம் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இருவருமே போஸ் கொடுப்பதில் ரொம்ப பிசியாக இருந்தார்கள். போவோர் வருவோர் எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தால் பிசி என்றுதானேஅர்த்தம். யாரோடும் அவர் பேசாததற்குக் காரணம் அவரும் காஜோலும் கட்டவுட்டாக வைக்கப்பட்டிருந்ததே காரணம்!!
ஹி ஹி ஏமாந்துட்டீங்களா?
மலை முழுக்க வெண்பனி மூடிக்கிடக்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் பனிப்பூவை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிகிறார்கள். சருக்கி விளையாடுகிறார்கள்.
அநத தளத்திலேயே ஐஸ்கட்டியின் மேல் நடக்கும் இடத்தையும், ஒரு குகையினுள் 50 மீட்டருக்கு நடந்து செல்லும் வசதியையும் செய்து கொடுத்த்ருக்கிறார்கள். பயங்கரமாக வழுக்குகிறது. போகப் போக குளிர் சரம்மாறியாகாக் குத்துகிறது. ஒரு கட்டத்தில் திரும்பிவிடலாமே என்று நினைத்தேன். அது ஒரு வட்டம் தொடங்கிய இடத்தின் வேறு வாசலுக்கு வந்துவிடுகிறோம்.
குகையினுள் எல்லாபுறத்திலும் ஐஸ் கூடிக்கிடக்கிறது. நானும் என் மனைவியும். ஐஸ் குகைக்குப் போகுமுன் |
லுசேனோ நகர் வீதி |
லுசேனோ ஏரிக்கறை |
Add caption |
மீண்டும் கீழே இறங்கி 30 நிமிட தூரத்திலுள்ள ரிஹியான போல்ஸ் (நீர்வீழ்ச்சிக்குக்) கிளம்பினோம்.
தொடரும்....
Comments
ஐயா.
அழகிய படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-