Skip to main content

Posts

Showing posts from 2022

.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும்

7.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக  இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும் கரிகாற் சோழன் சிறந்த நூலுக்கான விருது விழா மாலை 5.00 மணிக்குத் தொடங்கவிருந்தது. என் நூலுக்கு நான் விருது பெறப்போகிறேன் என்ற திகைப்போ பதட்டமோ நான் உணராமல் இருந்தது எனக்கே  வியப்பாக இருந்தது. நான் என சிறுகதைகளுக்கும் நாவலுக்கும், கவிதைகளுக்கும் நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் உண்டான மகிழ்ச்சி இந்த விருதுக்கு ஏற்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்ததை பின்னர் நான் உணர்ந்தேன். நான் எழுதிய கையறு நாவல் மலேசியாவிலும்  சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பரவலாகவே வாசிக்கப்பட்டு மதிப்புரைகளும் விமர்சனங்களும் பல்வேறு மின்னிதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.  ஒரு நூலுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவை. அதுவே படைப்பாளனுக்குக் கிடைத்த மதிப்புமிக்க விருதுகள். அதன்பொருட்டே அதீத மகிழ்ச்சி உண்டாகவில்லை. நூலுக்கான வாசகர்/ விமர்சகர் மதிப்பை முன்னமேயே பெற்றுவிட்டதால் நான் என்னை இயல்பாக எதிர்கொண்டதாகத்தான் உணர்ந்தேன். என் முகநூலில் Punniavan Govindasamy அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  கரிகாற்சோழன் வ...

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்

  அன்பழகன்,சைமன், முனைவர் குறிஞ்சி வேந்தன், கோ.புண்ணியவான் 7. ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்   நவம்பர்   28 காலை ரம்யாஸ் விடுதியின் ஐந்தாவது மாடியில் காலை உணவு வகைகள் 100க்கு மேல் இருந்தன. You name it என்று  சொல்வதற்கொப்ப எண்ணற்ற வகைகள். ஆனால் என் வயிறு ஒரு இட்லிக்கு மட்டுமே திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கப் காப்பி அவ்வளவே. மணி 11.00 காலையில் வாடகைக் கார் வரும் கல்லணை பார்க்கலாம் என்று சொன்னார் சைமன்.நான் கல்லணையை ஏற்கனவே இருமுறை பார்த்துவிட்டேன். என்னைக் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டிருந்தது.கடந்த மாதம் மனைவியோடு போனபோதுகூட பார்த்துவிட்டுத்தான் வந்தேன். எனக்கு விருப்பமில்லை என்றாலும் நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.கலந்து கொண்டேன். திரண்டுவந்து  மோதிச் சீறும் ஆற்றைப்பார்ப்பது எப்போதுமே மனம் களிப்புறும். பஞ்சுப்பொதிகளாய் விம்மிப் புடைத்து உடையும் குமிழிகள் நிலையில்லாத மானுட வாழ்வைப் பிரதிபலிப்பவை.பரந்து விரிந்து காட்சிதரும் நதியை கண்கள் தரிசிப்பது ஒரு வகை சுகானுபவம். குளிர்மை உள்ளுடல் முழுதும் நிலத்திலிருந்து ஊ...

ஹோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

6. ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.     நான் நீண்ட படைப்பிலக்கியம் எழுதுவதில் விருப்பம் இல்லாதவன். என் விருப்பம் அதுவாக இருந்தாலும், நான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன் தொடங்கிவிட்டால் படைப்பு நம்மைத் தொடர்ந்து எழுத அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலையின் மகத்துவம்.தொடங்கியவுடனே நம் சிந்தனை முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களா என்றே நாம் பிரமிக்கிறோம். நாம் கடந்துவந்த உப்புக்குதவாத செய்லகள்கூட அழகியலால் கவித்துவத்தால் அவை வாசிக்கத் தகுந்த சுவாரஸ்யத்தை தனக்குள்ளே புதைத்துவைத்துக்கொண்டு எழுதும்போது இன்னும் சீற்றத்தோடு வெளிப்பட்டுவிடுகின்றன. இயல்பாகவே கடிவாளம் இழுக்கப்பட்டவுடன் முன்னோக்கிப் பாயும் மனித சிந்தனை, படைப்பாற்றலின் வெளிப்பாடு, அதற்கு ஈடாக இயங்கும் மொழி நீண்ட படைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது. எனக்கு நாவல் எழுத வராது என்று என் நண்பர் சொன்னவுடன் நான் இதைத்தான் சொன்னேன். முதல் அத்தியாயத்தை எழுதிவிடுங்கள் பின்னர் அதுவாகவே இழுத்துவைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல உந்தும் என்று. கலை மனிதனுக்குக் கொடுப்பது பரவசம் மட்டு...

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

5.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்திலிருந்து  காரை ஓட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்குவது ஓர் இனிமையான அனுபவம்.  பச்சை பூத்து மலர்ந்து நிலைத்த நிலம். வானத்தில் நீலத்தை மறைத்து தன் நிறத்தையே முன்னிலைப்படுத்துக்கொள்ளும் சுயநலம். செம்பனைக் காட்டின் நடுவே கடல் நாகம்போல வளைந்து  நெளிந்து கீழிறங்கும் தார் சாலை. முன்னர் மண்சாலை.வழி நெடுக்க சாலையைத் தொட்டு வழியனுப்பும் செம்பனை இலைத் தோரணம். செம்பனைப் பழங்கள் ரத்தச் சிவப்பில் குலையாய்  குலையாய் தாய்மை பொங்கி நிற்கும். அடி மண்ணிலிருந்து கிளம்பி மட்டைகளுக்கிடையே குடிபெயர்ந்துவிட்ட கரிய வைரக்கல் என பழுக்கக் காத்திருக்கும் செம்பனை குலைகள்.  செம்பனைக் காட்டுக்குள் நுழைந்தாலே குளிர்மை அப்பும். நான் செம்பனை எஸ்டேட்டில் வேலை செய்தவன், எனவே பார்த்தாலே பசுமை நிறைந்துவிடும். இந்தப் பசுமைப் பயணம் மேலும் சற்று நேரம் நீடிக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும். நான் நேராக ஜோர்ஜ்டௌன் விக்டோரியா கார்டன் விடுதியை அடைந்தேன்.  பினாங்கு அனைத்துலக இலக்கிய அமைப்பு கொடுத்த வசதியை அந்த வி...

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

 4.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.      நான் கலந்துகொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு பினாங்கில் நடக்கவிருந்தது. இது எனக்கு முதல் அனைத்துலக மேடை என்பதால் சற்றே பதட்டமாகத்தான் இருந்தது. மேடை ஏறுபவர் பெரும்பாலானவர்க்கு பதட்ட உணர்வு தவிர்க்க முடியாதது. எத்தனையோ மேடையைக் கண்டாயிற்று ஆனால் இந்தப் பதட்ட உணர்வுமட்டும் கழட்டிக்கொள்வதில்லை. மேடை ஏறியவுடன் அது தானாகவே கழண்டு கொள்கிறது. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி என்பதாலும் அறிவார்ந்து பேசவேண்டும் என்பதாலும், அதுவும் அறிவார்ந்த சூழலில் பேசவேண்டும் என்பதால்  உண்டாகும் உள்ளுணர்வு அது. அந்தப் படபடப்பு ஜெயமோகன் போன்ற இமையங்களுக்கே உண்டாகிறதென்றால் நான்  எம்மாத்திரம்? உள்ளபடியே நிஜ வாழ்க்கையில்  அனுபவிப்பதைவிட கற்பனையில்தான் நிறைய உணர்ச்சிக்கொந்தளிப்பை அனுபவிக்கிறோம்..  இந்நிகழ்ச்சியில் சிங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கனகலாதாவும் மலேசியாவின் நண்பர் அ. பாண்டியனும் பேசவிருக்கிறார்கள்.மலேசிய தீவிர இலக்கிய உலகின் தன்னை அழுத்தமாக நிறுவிக்கொள்ளும் வகையில் படைப்புகளைத் தந்துக...

ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.

 3. ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.   ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாவில் இரவு விருந்து முடிந்து நான் விக்டோரியா இன் ஓட்டலில் தங்கிவிட்டேன். நல்ல வசதிகள் கொண்ட அறை.குறைந்தது 4 நட்சத்திர தகுதிகொண்ட விடுதி அது. விருந்தின்போது என்னிடம் இரண்டு  உரைகள் கொடுக்கப்பட்டன. திறந்துபார்த்தால் இரண்டிலும் பண நோட்டுகள். நான் கலந்துகொள்ளப்போகும் இலக்கிய உரையாடலுக்கு வழங்கப்பட்ட சன்மானம்.  தொகை சற்றே அதிகமானது. எழுத்தாளர்கள் கூடி இருந்ததால் அந்தப்புராதன வளாகம் வனப்பு கூடி இருந்ததாக இரவு உணவின் போது உணர்ந்தேன்.இப்போது அதன் அழகு‌மேலும் ஒருபடி கூடி இருப்பதாக உணரவைக்கிறது. 24.11.22 இரவு விருந்தில் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாத் தலைவர் போலினோடு  மணி 12 வாக்கில் ஜெயமோகனையும் அருண்மகிழ்நனையும் )என்ன அழகான பெயர்) ஏற்றிக்கொண்டு பிரம்ம வித்யாரண்யம் பயணமானேன்.  பாண்டியன் அருண்மொழியையும், லதாவையும், லோஷினியையும் ஏற்றிக்கொண்டார், மதிய உணவை பட்டர்வர்த்தில் சாப்பிடலாம் என்றே திட்டம் (எப்போதுமே உணவு விஷயத்தில் மட்டும் முன்திட்டம் போடுவதில் கவனமாகத்தான் இருக்கிறோம்).ம...

ஜோர்ஜ்டௌன் அனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்

  2. ஜோர்ஜ்டௌன் அனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்      ஜெயமோகன் சட்டைக்குப் பொத்தான்கள் போட்டவாறே சற்று நேரத்தில் வெளியே வந்தார். நலம் விசாரித்தபடியே நான் வைத்திருந்த என் கையறு நாவலை  அவரிடம் நீட்டினேன்.தன் வலைத்தளத்தில் கையறு நாவலைப்பற்றி மூன்றுமுறை எழுதியிருந்தார். நவீன், சு.வேணுகோபால் போன்ற நம்பகம் மிகுந்தோரின் ரசனை விமர்னசங்களை வாசித்தபின்னரே மலேசியாவின் முக்கியமான நாவல் கையறு என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அவர் அதனை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்று நான் கனித்தது சரியாக இருந்தது. "ஜெ நான் ஜீவ கரிகாலனிடம் உங்களுக்கு ஒரு பிரதியை அனுப்பச்சொல்லியிருந்தேன்" என்றேன். "இல்லையே ஒரு தபாலைக்கூட மிஸ் பண்ணமாட்டேன், வரவில்லையே" என்றார். "அதனால்தான் எடுத்து வந்தேன் " என்றேன். "யாருக்கும் கொடுக்க மட்டேன்னு மறைச்சி மறைச்சி வச்சிருக்கீங்களாம்." என்றார். " இல்லையே மலேசியாவில் மட்டும் 700 பிரதிகள் விற்றிருக்கின்றன, உங்கள் பதிவால் தமிழ் நாட்டிலும் பரவலான வாசிப்புக்குப் போயிருக்கிறது,"என்றேன். "நாவலைக் கையில் வாங்கியவர் நூல்...

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் , கரிகாற்சோழன் விருதும்

1.  ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் , கரிகாற்சோழன் விருதும் .   தமிழ் படைப்புலகம் தமிழ் வாசகர்களுகுள்ளேயே தேங்கிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் கருத்தாகவே இருக்கிறது.அது மறுக்க முடியாத உண்மையுங்கூட.ஐரோப்பிய ருஷ்ய ஆப்ரிக்க இலக்கியங்கள் பரந்த எல்லையைத் தொட்டு உலக விருதுகளை வென்று விடுகின்றன. பொதுவாகவே விருதுகள் பெற்ற இலக்கியங்கள் பேசப்படுகின்றன. அதனைவிடவும் சிறந்த படைப்பிலக்கியங்கள் மொழிபெய்ர்ப்பு செய்யப்படாத காரணத்தால் தமிழின் தரமான படைப்புகள்கூட அனைத்துல வாசகப் பரப்பை எட்டாமல் அது அடையவேண்டிய அந்தஸ்தை  அடையாமல் தேங்கிவிடுகின்றன.  ஜெயமோகன் போன்ற ஆளுமைகளுக்கு நியாயமாகத்  கிடைக்கவேண்டிய அந்தஸ்து கிடைக்காமல் போவதற்கு இதுதான் முக்கிய காரணம். அறம், யானை டாக்டர் போன்ற சிறுகதைகள் சமீபமாகத்தான் அனைத்துல இலக்கிய அரங்கில் வைக்கப்பட்டிருக்கின்றன காரணம் அவை தகுதியுள்ளவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பரந்துபட்ட வாசிப்புக்குப் போயிருக்கிறது.  சமீபத்தில் நடந்த GTLF அனைத்துல ஜோர்ஜ் டௌன் விழாவில் ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் ஜெயமோகனிட...