Skip to main content

Posts

Showing posts from 2011

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்.

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.                        என் அக்கம் பக்க வீடுகளில்  குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது. எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள்.  சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும்  கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம்.  பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே வீடமைப்புப் பகுதியிலிருந்து சீனப்பெண்களும் ஆண்களுமாய் கூடியிருக்கும் வீட...

பிரிவு

குடி வந்த புதிதில் வீட்டு வாசலில் குங்குமம் பூசி பட்டுத்துணியின் தொட்டிலின் பூசணி அதனை வாங்கி வந்த மகள் ஒரு திசையில் அதனைக்கட்டிய மருமகன் எதிர்த்திசையில் கட்டிப்போடப்பட்டபடியே பூசணி

விழுதுவிட்டு வளர்ந்துவிட்ட வீடு

ஆக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் சமீபத்தில் நான் குடியிருந்த பழைய வீட்டைக் கடந்து போகவேண்டியிருந்தது. என் நண்பரின் இறப்பு என்னை அங்கு செல்ல வைத்திருந்தது. அப்போது அந்த வீடும், வீட்டின் சுற்றுப்புறமும் என் வருகையால் உயிர் பெற்றுவிட்டது போன்ற உணர்வு எனக்கு உண்டானது. அண்டை வீட்டு நண்பரின் மரணத்தை விட இந்த வீட்டின் நினைவே என்னைச் சுற்றி சூழ்ந்துகொள்ள ஆரம்பித்திருந்தது. நான் குடியிருந்த என் பழைய வீட்டைக் கடந்துதான் நண்பரின் வீட்டுக்குச் செல்லவேண்டும். ஆனால் நான் குடியிருந்த வீட்டை எளிதில் கடந்து  சென்றுவிட முடியவில்லை என்னால். அந்த வீடு தன் ஆக்டோபஸ் கைகளால்  என்னை ஈர்த்தபடி இருந்தது. அதனைத் திரும்பிப் பார்த்த படியே நடந்தேன். அந்த வீடு எனக்கு இப்போது சொந்தமில்லை என்றாலும் எனக்கும் அதற்குமான உளப்பூர்வமான பந்தம் தொட்டுத் தொடர்ந்த வண்ணமாகவே இருந்திருக்கிறது. வந்த வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்போது ஒருமுறை வீட்டை எட்டிப்பார்த்துவிட்டாவது போய்விடவேண்டும் என்ற ஆசை உண்டானது. நண்பரின் மரணத்துக்கு வந்த என்னை நான் புழங்கிய வீடுதான் என்னை முழுமையாக ஆக்கிரமித்தபடி இருந்தது. இறப்...

அறிவுக்கு எட்டா ஆழிக்கூத்து

அக்டோபஸ் கவிதைகளும் ஆழ்ந்த கவித்துவமும்.            2004 டிசம்பர் 26ஆம் நாள் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத ஒருநாள். ஆழிக்கூத்து அரங்கேறி ஆயிராமாயிரம் உயிரைக் காவு கொண்ட கருப்புநாள். நான் மயிரிழையில் தப்பிப்பிழைத்த நாள். அன்று நானும் மனைவியும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சுற்றுலா நண்பர்கள் 38 பேரும் சென்னையிலிருந்து ஊர் திரும்ப ஆயத்திமாகிக்கொண்டிருக்கிறோம். டிசம்பர் 25ஆம் நாளை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னர் கடைசி கடைசி என்று பொருட்கள் வாங்க பாண்டி பஜாரில் இருக்கும்போதே மறுநாள் நிகழவிருக்கும் ஊழிக்கூத்து அசம்பவிதத்துக்கான அறிகுறிகள் அப்பொழுது  நிகழ்ந்தது. என் மனைவி சேலை துணிமணிகள் வாங்க வேறு திசைக்கு போய்விட்டிருந்தாள். நானும் சில நண்பர்களும் நூல்கள் வாங்கக் கிளம்பிவிட்டிருந்தோம். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் பிரிந்து கிடக்கிறோம். கடையைத் தேடி அலைந்த நேரத்தில் நாங்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் சாலையில் ஆயிரக்கணக்கான  மனிதக்கூட்டம் திமு திமுவென்று எங்களை நோக்கி ஓடிவருகிறது. பேரலை புரண்டு வருவது போன்ற ஆரவாரம். மனித...

காலணிகள்

காலணிகள் கடைவீதிகளில் கணக்கில்லா காலணிகள் எதை வாங்குவது ? மாளிகை வாசலில் பள பளக்கும் வண்ணங்களில் பல நூறு செருப்புகள் அவள் காதணிக்கு எது எடுபடும் ? உயரத்துக்கு எது சரிபடும் ? தேர்வு செய்யவே ஒரு அழகுக்கலை நிபுணர் நடிகை ஏவலுக்கு . திருமதி மார்க்கோஸ் இரண்டாயிரம் வகை காலணிகள் பாரிஸ் ஷூ கோனரிலும் பல நூதன நகரங்களின் பந்தா கடைகளிலும் பார்த்து வாங்கியதாம் கல்யாண விருந்தின் காலணிக்கு அறை மாதமாய் அலைந்தும் அகப்படவில்லை ஒன்றும் செருப்பில்லா கால்களுக்கு சிறப்பேதும் உண்டா பாதங்களை இழந்தவனுக்கு பாதுகை பெரிதில்லைதான் பாதமே பெரிது இவருக்கு நாய் குதறிய காலணிகளும் மிஞ்சவில்லை ஜோடி பிரிந்ததும் வாய்ப்பில்லை ஆயிரமாயிரம் காலணிகள் அலங்கரிக்க கால்கள் இருக்க பாதுகை பாராத பால்லாயிரம் கால்களின் பிரதிநிதிக்கும் ஒரு ஜோடிக் கால்கள் இவை இருள் கவிந்த உலகத்தை இதயம் இருக்கா என்று வினவும் கால்கள் இவை மனிதம் மரத்துப்போனதால் மறக்கப்பட்ட கால்கள் இவை சிம்மாசனம் ஏறிய பாதுகைகளில் மிதிபட்டு சின்ன ஆசனம் கிடைக்காத கால்கள் இவை

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம்

                      நன்றி (படங்கள் வ. முனியன்) (சிங்கப்பூரில் கடந்த 28,29.30 அக்டோபரில்(2011) நடந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன்வைத்து)          இலக்கிய வளர்ச்சியின் அடுத்த கட்ட பரிமாணத்தை அடையவும்,  தமிழர் புலம் பெயர்ந்த இடங்களில் இலக்கியம் சார்ந்து நடக்கும்  வளர்ச்சியை அல்லது மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளவும்  சமீபத்தில் சிங்பப்பூர்த்தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘தாயகம் கடந்த தமிழ்    கூட்டியது. கனடா, சிரிலங்கா, ஆஸ்திரேலியா,ஜெர்மனி,பிரான்ஸ்,  அமெரிக்கா பிரிட்டன் இந்தியா, சிஙக்ப்பூர், மலேசிய போன்ற  நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர். கட்டுரையாளர்கள்  மேற்குறிப்பிட்ட நாடுகளின் இலக்கிய  , வளர்ச்சியும் அதன் போரட்டங்கள் குறித்தும் கட்டுரைகள் படைத்தனர்.        தமிழர்களின் தாயகம் என்பதற்கான பொருள் இந்தியாவாகவே இருக்கிறது என்பதாகவே கருப்பொருள் ...

அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும்.

10. மழையில் நனையும் வார்த்தைகள். நான் சமீபத்தில் ராஜஸ்தானின் தலை நகரமான ஜெய்ப்பூருக்குச் சென்றிருந்தேன். நூற்றுக்கண்கான ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த மன்னர்களால் கட்டப்பட்ட பெரும் கோட்டைகளைக் கொண்ட ஒரு புராதன ஊர் ஜெய்ப்பூர். நாம் ஊருக்குள் நுழையும் போதே கோட்டைகள் நம்மை வரவேற்கும். ஊருக்குள் நுழைந்தவுடன் கோட்டைகள் நம்மை சூழ்ந்துகொள்ளும். ஒரு தலை நகரமாக இருந்தாலும் புராதன கட்டமைப்புக் கொண்ட நகரமாகத்தான் அதனை நாம் அவதானிக்க முடியும். நூதன கட்டடங்களையோ, பட்டணத்துக்கே உள்ள நேர்த்தியையோ , குறிப்பாக பச்சை வெளியையோ நாம் பார்க்கமுடியாது. நம் ஊரில் நாம் காணும் பட்டண வளாகத்துக்குள்ளிருக்கும் பச்சை புல் வெளியையும் பூந்தோட்டங்களையும் கண்டிப்பாய் ஜெய்ப்பூரில் பார்க்க முடியாது. ஏனெனில் அது மழை காணாது வானம் பார்த்த பூமி. ஜெய்ப்பூரிலிருந்து நூறு கிலோமீட்டர் துரத்தில்தான் புகழ்பெற்ற பாலைவனமிருக்கிறது. பாலைவனம் என்று சொன்னாலே மழைக்குப் பெரும் எதிரி என்றே பொருள் கொள்ளலாம். ஜெய்ப்பூரில் மழை பெய்யாமல் இருப்பதற்கு அந்த நகரைச்சுற்றியுள்ள மாபெரும் கல் மலைகள் ஒரு காரணமாக இருக்கிறது. மழை மேகங்களைத் தடுத்து நி...

இனி நவீனக்கவிதையாக நீட்சி காணும் கருத்தரங்கு

                            கவிஞர் மணிமாறன்                      கவிஞர் தேவராஜன், தலைவர் ராஜேந்திரன்                             ஊக்கச் சக்தி முனைவர் முல்லை                         சமூகச் சிந்தனையாளர் ராமேஸ்வரி                   ஏற்பாட்டுக் குழுத் தலைவி செண்பகவல்லி        தொடர்ந்து இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வது என்னைப்போன்ற படைப்பாளனுக்கு உவப்பான விடயம்.  அரசு பதவியிலிருந்து ஓ...

உன்னை நன்றாக இறைவன் படைத்தனன் என்னை நன்றாகக் கொள்ளையிடுவதற்கே

என் நினைவு இடுக்கில் ஒரு கரப்பான் பூச்சியைப்போல உள் நுழைந்துகொண்டாய் முன் அறிவிப்பு ஏதுமின்றி ஒரு ஆதர்ஸ விருந்தாளியாய் உன்னை மறக்க நினைத்து மறக்காமல் இருக்கிறேன் உன்னைத் துறக்க நினைத்து பின்தொடர்கிறேன் உன்னை மறுதலிக்க மறுதலிக்க குருத்தாய் மறுபடி மறுபடி பிரசன்னமாகிறாய் உன்னைத் திரும்பிப்பார்க்கவே திரும்பிப் பார்க்காமல் கடக்கிறேன் உன்னிடம் பேசவே மௌனமாகிறேன் உன்னை நெருங்கி வந்தே தூரமாகிறேன் துயிலின் விளிம்பில் இமையைத் துளையிடுகிறாய் கனவின் கதவுகளைத் கறாரய்த் தள்ளித்திறக்கிறாய் நரம்புகளில் நிரம்பி வழிகிறாய் உன் அழைப்பு அதுவென புன்னகையில் சிலிர்க்கிறேன் நரம்புகளில் சந்தேகக் குருதி இரு அணுக்களையும் புறமுதுகிடச் செய்கிறது இச்சை  இறுமாப்பு கொண்டு அடங்க மறுக்கும் அலெக்சாந்தர் குதிரையாகிறது நான் உன்னோடு எனக்குள் பேசிக்கொள்கிறேன் பேசிப் பேசிப் என் பொழுது கணப்பொழுதும் சாய்ந்ததேயில்லை மையிருட்டில் தரிசிக்கும் தருணம் அலாதியானது அப்போது எனக்காகத் ஒரு காட்டு மலரைப்போல்  காத்திருக்கிறாய் உன் வசீகர பிம்பம் மனதுக்குள் அடங்காது எரிகிறது ...

கதை எழுதலாம் வாங்க

                            திரு. குமாரசாமி                            பயிற்சி ஆசிரியர்கள்                            அடியேன்        பினாங்கு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஒரு சிறுகதைப் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதன் விரிவுரையாளர் திரு குமாரசாமி என்னை அக்டோபர் 8ஆம் தேதியே அழைத்திருந்தார். அந்தத் தினத்தன்று போர்ட் டிக்சனில் புதுக்கவிதை கருத்தரங்கில் நான் பேசுவதாக இருந்தது. எனவே என் சௌகர்யம் கருதி கதைப்பயிலரங்கை 14 ஆம் தேதிக்கு மாற்றினார்கள். நான் அந்தக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேனே தவிர போனதில்லை. அங்கே தமிழ் ஒரு பாடமாக கடந்த ஆண்டுதான் ...

எதிர்வினைகள் - பிறிதொருவர் பார்வையில்

கோ . புண்ணியவானின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளிப்பற்றிய ஒரு பார்வை . புண்ணியவானுக்கு நன்றாகக் கதைச் சொல்ல வருகிறது . இவரது கதைகளுடன் எனக்குள்ள இருபது வருடப் பரீட்சயத்தில் கண்டடைந்த முடிவு   இது . ஒரு கதைச் சொல்லிக்கு சரியான விஷயத்தை தேர்வு செய்வது மட்டும் போதாது ; சரியாக அதைச் சொல்லவும் தெரிந்திருக்க வேண்டும் . அவன் எழுத்தாளனாகப் பரிணமளிப்பது அப்போதுதான் சாத்தியமாகிறது . கோ . புவுக்கு இந்தச் சமுதாயத்தைப் பற்றிய ஒரு தீர்க்கமான பார்வை உள்ளது . அதன் இறுக்கங்களையும் , உள்ளடுக்குகளில்   மறைந்து கொண்டு மனதை ரணப்படுத்தும்   சமூகப் பலவீனங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் தெளிவான சிந்தனையும் , அதற்கு ஈடான படைப்பூக்கமும் , மொழி ஆளுமையும் ஒருங்கே அமைந்துள்ளது .             எழுத்தாளன் சாதாரண விஷயங்களில்   பதுங்கிச் சொல்லும் அசாதாரணமான கணங்களை படைப்பினுள் கொண்டுவருகிறான் . இத்தொகுப்பில் உள்ள பல கதைகள்   சாதாரணமான...