என் பேத்தி நவீனா பள்ளி முடிந்து வீட்டுக்கு ஏற்றி வந்தேன். இன்று ஆண்டின் பள்ளி இறுதி நாள். காரில் ஏறும்போதே உற்சாகமாக ஏறினாள். நான் சோதனையில் முதலாவது மாணவி என்றாள். அதற்கு ஆதாரமாக் கையில் பரிசுக்கிண்ணங்கள். நல்லது வாழ்த்துகள் என்று சொன்னேன். எபோதுமே முதல் மாணவிதான். ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் முன்றாண்டுகளைக் கடந்துவிட்டாள். வயது ஒன்பது. அவள் தம்பி நான்காவது இடத்தைப்பிடித்ததைச் சொல்லி இடித்துரைத்தாள். வீட்டை அடைந்ததும் தாத்தா இதப்பிடிங்க என்று என் கையில் ஒரு ரிங்கிட்டைத்திணித்தாள். ஏன் என்றேன். நான் உங்கள் வீட்டுத்தொலைபேசியை பயன் படுத்தப்போறேன், அதற்கான கட்டணம் என்றாள். செம் அடி எனக்கு. தொலைபேசியை அவள் பயன்படுத்தும்போதெல்லாம் பில் எகிறும் அடிக்கவேண்டாம் என்று எச்சரிப்பேன்.. அதற்காக கொடுத்த அடிதான் இது. அறைக்கதவை மூடிக்கொண்டு நான்கைந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.எத்தனை பேரிடம் பேசினாய் என்றேன். இருவரிடம் என்றாள். என்ன பேசினாய் என்றேன். என் சோதனை முடிவைச்சொன்னேன் என்றாள். அப்படியானால் நீ கொடுத்த பணம் போதாது. ஒரு நபருக்குத் தொலைபேசியில் பேசினால் ஒரு வெள்ளி தரவேண்டும் என்றேன். பதில...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)